திருக்கோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்ப்பு

Trincomalee Sri Lanka Senthil Thondaman
By Independent Writer Jul 01, 2024 11:16 AM GMT
Report
Courtesy: H A Roshan

திருக்கோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று (01) திருகோணமலை, திருக்கோணேச்சர ஆலய பரிபாலன சபைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை திருக்கோணேச்சர ஆலய பரிபாலன சபையினர் ,தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர். 

மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்

மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்

ஆலயத்தின் புனிதத்தை பாதுகாக்கும் நடவடிக்கை

திருக்கோணேச்சர ஆலய அண்மித்த கடைத் தொகுதியில் கசிப்பு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியதையடுத்து அதனை சீல் வைக்கச் சென்ற திருகோணமலை நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதனை கண்டித்தும் புனித தன்மையை பாதுகாக்க அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்துள்ளனர். 

இந்த புனித ஆலய சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் சட்ட ரீதியாக கடையை சீல் வைக்க சென்றவரை தாக்கியதும் கண்டிக்கத்தக்கது எனவும் இதன் போது தென்காயிலை ஆதினம் அகத்தியர் அடிகளார் கூறியுள்ளார். 

திருக்கோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்ப்பு | Thirukoneswaram Seeking To Protect Protest Trinco

அத்துடன், கிழக்கு மாகாண ஆளுனருக்கு இது தொடர்பான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில், இந்த புனித தளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தற்காலிக கடைகள் அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடுவதாக ஆலய பரிபாலன சபை மூலமாக உரிய தரப்புக்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறப்பட்டது.

திருக்கோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்ப்பு | Thirukoneswaram Seeking To Protect Protest Trinco

இது தொடர்பில் (10.06.2019) அன்று மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது ஆலயம் ஊடாக செல்லும் கடைகள் அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் அமைத்துக் கொடுப்பது தொடர்பான விடயத்தை அனைவரும் ஏகமானதாக ஏற்றுக் கொண்டனர்.

சட்டவிரோத செயற்பாடு

இதன் தொடர்ச்சியாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்கள் (11.10.2022) அன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி இணக்கம் தெரிவிக்கப்பட்டும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில், அண்மையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் சட்டவிரோத செயற்பாடு ஒன்று இடம்பெற்றது.

திருக்கோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்ப்பு | Thirukoneswaram Seeking To Protect Protest Trinco

எனவே, ஆலயத்தின் புனிதத்தை பாதுகாக்க இது போன்ற சட்டவிரோத  நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தால் வியாபாரிகளின் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்படாது.

ஆகவே தற்போது கடைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில்  இருந்து மாற்று இடத்தை வழங்கி வியாபாரத்தை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போராட்டத்தில் ஆலய பரிபாலன சபை தலைவர் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சாய்ந்தமருது என்ற ஊரை உலகறிய செய்தவர்கள் சஹ்ரான் குழுவினர்: அஜித் ரோகண

சாய்ந்தமருது என்ற ஊரை உலகறிய செய்தவர்கள் சஹ்ரான் குழுவினர்: அஜித் ரோகண

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட போராட்டம்

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட போராட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US