இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப பல தேவைகள் உள்ளன
நாட்டில் ஒரு நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு இன்னும் கூடுதலான தேவைகள் இருப்பதாக இலங்கை தொடர்பான முக்கிய குழு தெரிவித்துள்ளது.
கனடா, ஜெர்மனி, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளன.
இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அமைதிக்கான உறுதிப்பாடு அவசியமானது. உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புதல், இடம்பெயர்ந்தோர் மீளத்திரும்பல் நிலம் திரும்புவது மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துதல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றம் வரவேற்கப்படுகிறது.
எவ்வாறாயினும், யுத்தத்தின் பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கும் நாட்டில் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் இன்னும் பல தேவைகள் செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாவதாக இலங்கை தொடர்பான முக்கிய குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு முக்கியமான அறிக்கையை இந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பரிசீலிக்கும் என்றும் இலங்கை தொடர்பான குழு குறிப்பிட்டுள்ளது.



