யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு: பிரதான சூத்திரதாரி கைது
யாழில் (Jaffna) உள்ள நகைக் கடை ஒன்றுக்குள் நுழைந்து நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஜந்து இலட்சம் ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த செயலுக்கு உடந்தையாக இருந்த வான் சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் கைது செய்யப்பட்டனர். மேலும், இரண்டு சந்தேக நபர்களை தேடி யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் யாழ்ப்பாணம் - கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் சென்ற குழுவொன்று பொலிஸ் புலனாய்வு பிரிவு (சிஐடி) என தெரிவித்து 30 இலட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றது.
பொலிஸ் விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதனடிப்படையில், சுன்னாகம் பகுதியில் நேற்றையதினம் (17) கைதான பிரதான சந்தேக நபரை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை, கண்டியில் இன்று (18) கைதான மூவரையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam