கொழும்பில் வர்த்தகரின் வீட்டுக்குள் பாரிய கொள்ளை - வெளிநாட்டிலுள்ளவருக்கு தொடர்பு
கொழும்பிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவம் தெஹிவளை, களுபோவில பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நடந்த நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள்
கைது செய்யப்படும் சந்தேக நபரிடமிருந்து பல தங்க நகைகள் மற்றும் 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை இலங்கையில் விநியோகிப்பதே இவரின் பிரதான செயற்பாடு என விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
