சுவிட்சர்லாந்து இந்து ஆலயங்களில் திருடர்களின் கைவரிசை
புதிய இணைப்பு
சுவிட்சர்லாந்து இந்து ஆலயங்களில் திருடர்களின் கைவரிசை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை பல திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த திருட்டுடன் தொடர்புபட்ட கும்பலானது இவ்வாறாக பல ஆலயங்களில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளை சுவிஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
சுவிஸில் துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவின் போது கடந்த சனிக்கிழமை பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக சுவிஸ் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் பெண்கள் குழுவாக சேர்ந்து திருடி உள்ள நிலையில், அவர்களின் காணொளி ஆதாரங்கள் ஆலயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேர்க்காத பட்சத்தில் ஆதாரங்கள்
திருடியவர்கள் ஆலய கண்காணிப்பு கமராவில் பார்த்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். எனவே திருடியவர்கள் ஏதோ ஒரு வழியில் பொருட்களை ஆலயத்தில் வந்து ஒப்படைக்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சேர்க்காத பட்சத்தில் அந்த ஆதாரங்கள் சுவிஸ் பொலிஸாரிடம் கொடுக்கப்படும் என ஆலய நிர்வாகம் எச்சரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam