உலகின் முதன் முறையாக கனடாவின் அரச பூங்காவில் அமையவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி

Srilanka
By Independent Writer Feb 01, 2021 05:45 AM GMT
Report

சமீபத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த, இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஞாபகார்த்தமான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிரம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிரம்டன் நகரசபை வட்டாரம் 3 மற்றும் 4 இன் மக்கள் பிரதிநிதி மாட்டின் மெடுரஸ் அவர்களால் பிரம்டன் தமிழ்ச்சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்கக் கொண்டுவரப்பட்ட பிரம்டன் நகரசபைக்குச் சொந்தமான காணியில், முள்ளிவாய்க்காலில் மறைந்த தமிழ் மக்களுக்கான நினைவுத்தூபி அமைக்கும் தீர்மானம் ஏகமனதாக ஜனவரி 20ஆம் நாள் புதன்கிழமை நடைபெற்ற நகரசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டமை யாவரும் அறிந்ததே.

பொதுவாக நகரசபையில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் தீர்மானம். அடுத்த வாரம் நடைபெறும் கூட்ட அமர்வில் கலந்தாலோசனை செய்யப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படும்.

இந்தவகையில் நினைவுத்தூபி அமைக்கும் தீர்மானத்திற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கான இரண்டாவது கூட்டம் கடந்த 27ஆம் நாள் புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் பிரம்டன் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதியாக பிரம்டன் தமிழ் ஒன்றியத்தின் நிர்வாகசபை உறுப்பினரும், பிரம்டன் தமிழ் முதியோர் ஒன்றியத்தின் ஆலோசகருமான அமலீதன் சேவியர் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

அத்துடன் அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபிக்கு தமிழ் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத்தூபி (Tamil GenosideMemorial) என்ற பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் விருப்ப மனுவை எடுத்துரைத்ததுடன் தனக்குக் கிடைத்த இவ்வரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாது சரியாகப் பயன்படுத்தியதன் விளைவாகத் தமிழ் மக்கள் சார்பான கோரிக்கை மீண்டும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி வடிவம் பெற்றமை பாராட்டுக்குரியது மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயமுமாகும் என்றால் அது மிகையல்ல.

எமது தாயகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி அழிக்கப்பட்டதனால் தாங்கமுடியாத மனவுழைச்சலில் இருந்தபோது புலம்பெயர் மண்ணில் அமைத்தே தீரவேண்டும் என்று எமக்கு உற்சாகமளித்தது மட்டுமல்லாமல் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய நகரபிதா பற்றிக் பிறவுன் அவர்களுக்கும் ஏனைய நகரசபை உறுப்பினர்களுக்கும் பிரம்டன் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் சில இடங்களில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஞாபகார்த்தமான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தாலும் முதன் முறையாக அரச பூங்கா ஒன்றில் கனடாவில் அமைகின்றமை குறிப்பிடத் தக்கது.  

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US