பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பெண் பலி! - யாழில் சம்பவம்
யாழில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்த நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் வடமராட்சி - அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த 51 வயதுடைய செபபாக்கியம் கிறேஸ் மணி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் கோவளம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த கொண்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
