அரசியலில் ஈடுபட தயாராகி வரும் முக்கிய முன்னாள் அமைச்சரின் மனைவி
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவின்(Rajitha Senaratne) மனைவி சுஜாதா சேனாரத்ன (Sujatha Senatane) அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக தெரியவருகிறது.
சுஜாதா சேனாரத்ன, மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அவர் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சுஜாதா சேனாரத்ன தற்போது களுத்துறை மாவட்டத்தில் தேர்தல் பிரசார வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளார். விசேட மருத்துவ நிபுணரான சுஜாதா சேனாரத்ன, ராஜித சேனாரதன் சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றினார்.
அத்துடன் சுஜாதா சேனாரத்ன, கடந்த காலங்களில் அரசியலில் செய்திகளை உருவாக்கும் நபராக இருந்த சத்துர சேனாரத்னவின் (Chathura Senaratne) தாயார்.
இந்த நிலையில், சுஜாதா சேனாரத்ன அரசியலுக்கு வர தயாராகி வரும் பின்னணியில், சத்துர சேனாரத்ன, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.
சுஜாதா சேனாரத்ன, மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து அரசியலில் பிரவேசிக்க தயாராகி வரும் சூழ்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஒன்றை நடத்துவதில்லை என தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.