கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
35 வருட காலத்தில் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்து அதனை திரும்பவும் இலங்கை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்கும் உடன்பாட்டின் கீழ் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன அமைச்சரவையில் தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக அரசாங்கம் அந்த திட்டத்தை கைவிட்டது.
இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
