வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை
வரவு செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் இருக்குமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பித்ததுடன் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான விவாதங்கள் கடந்த 13 ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தன. 7 நாட்கள் இந்த விவாதங்கள் நடைபெற்றன.
வரவு செலவுத்திட்டம் தொடர்பான குழு நிலை விவாதங்கள் நாளை மறுதினம் ஆரம்பமாக உள்ளது.
இந்த விவாதங்கள் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்து 16 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு அடுத்த மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
