இலங்கை அரசாங்கத்தின் அர்த்தமற்ற செயல்! முன்வைக்கப்படும் விமர்சனங்கள்
இலங்கை அரசாங்கம் அர்த்தமற்ற முடக்கலை விதித்துள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம்(GMOF) தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக இருந்திருந்தால், நாடு தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்காது என்று அந்த மன்றம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் தடுப்பூசி திட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. அத்துடன் அதன் வழிமுறை தோல்வியடைந்துள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகளின் மன்ற தலைவர், வைத்தியர் ருக்ஷான் பெலன்ன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தடுப்பூசித் திட்டம் அரசாங்க அதிகாரிகளால் கையாளப்படவில்லைஅரச தொற்றுநோயியல் பிரிவு இருந்த போதும், அதன் கட்டுப்பாடு வேறு சில கைகளுக்கு சென்றுவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியின் முழு பலனைப் பெற ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள, தடுப்பூசி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ள போதும், சில தடுப்பூசிகளின் இரண்டாவது அளவுகள் பல மாதங்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்டது என்று வைத்தியர் பெலென்ன சுட்டிக்காட்டியுள்ளார்.