பொது விவாதத்திற்கு வருமாறு சரத்வீரசேகரவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பொது விவாதத்திற்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, பொது பாதுகாப்பு துறை அமைச்சர் சரத்வீரசேகரவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்று குற்றப்புலனாய்வு துறையில் வாக்குமூலத்தை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கேள்விகளை தொடுக்க வேண்டாம் என்று தாம் இன்று குற்றப்புலனாய்வு துறையிடம் கேட்டு கொண்டதாக ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
தமது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தியே அந்த கருத்துக்களை தாம் வெளியிட்டதாக ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய தற்கொலையாளி ஒருவரை, புலனாய்வு அதிகாரி ஒருவர் சந்தித்ததாக வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே இன்று ஹரின் விசாரிக்கப்பட்டார்.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri