மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் - அவசரமாக கூடிய ஐ.நா பாதுகாப்பு பேரவை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள நேரடி மோதல்கள் குறித்து விவாதிக்க, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் நேற்றைய தினம் அவசர கூட்டத்தை நடத்தியிருந்தது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
கூட்டத்தில் ஆலோசனை
இந்தச் சூழலில், வன்முறையைக் கட்டுப்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச சமூகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மோதல் மேலும் தீவிரமடைந்து ஒரு முழு அளவிலான போராக மாறுவதைத் தடுக்கவும், இராஜதந்திர ரீதியான தீர்வுகளை எட்டவும் இக்கூட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
குறித்த அவசர கூட்டமானது நியூயார்க்கில் "The situation in the Middle East" என்ற அமர்வின் கீழ் நடைபெற்றது.
எச்சரிக்கை
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரஸ் கூறுகையில், இந்தத் தாக்குதல்கள் "உலகின் மிகவும் நிலையற்ற பகுதியில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத சங்கிலித் தொடர் நிகழ்வுகளைத் தூண்டிவிடும்" அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
மேலும், தாக்குதல்கள் மற்றும் மோதல்களின் அதிகரிப்பைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri