யாழ்ப்பாணத்தில் இளம் யுவதிக்கு நடந்த கொடூரம்: தலைமறைவாகிய இளைஞர்கள் - வெளியான பகீர் தகவல்

Investigation Police Sri Lanka Jaffna Girl Miss call
By Independent Writer Jan 12, 2022 12:11 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட யுவதியினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யுவதியின் தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் (11) குறித்த இளைஞன் , யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும் , அதன் போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.

இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும் , 40 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் எடுத்துக்கொண்டு நேற்று காலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

குறித்த இளைஞன் அப்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு , ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு , ஐஸ் கிறீம் குடித்த பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அந்த யுவதியை தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக , வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி , உறவு கொண்டுள்ளார். பின்னர் , தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார்.

இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்து உள்ளனர். பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அவ்விடத்திற்கு வந்து நான்கு பேருமாக யுவதியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் யுவதியிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் , நகைகள் , தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர் , யுவதியை அழைத்து வந்த இளைஞன் யுவதியை மீட்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமுறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதனால் , முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது நான்கு பேரும் நேற்றையதினத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளமை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந் நிலையில், குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும், கடந்த வருடம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த யுவதியை ஒருவரை முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞன் அந்த யுவதியை காதலிப்பதாக கூறி முள்ளி பகுதிக்கு அழைத்து சில இளைஞர்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.          

மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US