அரசியல் பயணம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் இரு முக்கிய கட்சிகள்
கூட்டமைப்பினர் இந்தியா ,அமெரிக்கா போன்ற தூதுவர்களை சந்தித்து பேசும் பொழுது வடகிழக்கிலுள்ள 13 கட்சிகளையும் ஒன்றிணைத்து வெளிப்படை தன்மையாக ஏன் சந்திப்புக்களை மேற்கொள்ள முடியவில்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரொருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எமது ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் பேசும் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு அரசாங்கமும்,சர்வதேசமும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் உள்ளபோது, பெரும்பான்மை வாக்குகளை பெற்ற சிலர் இவ்வாறு முக்கிய சந்திப்புக்களை வெளிப்படை தன்மையின்றி கலந்தாலோசிக்கும் போது அவை மேலும்,இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை பெற்றுக்கொடுப்பதாகவே கருதப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த கூட்டமைப்பினர்,வெளிநாட்டு பிரதிநிதிகளை கூட்டமைப்பினர் சென்று சந்திக்கும் போது அனைவரையும் ஒன்றிணைத்து குழுக்களாக சென்று பேச வேண்டிய சூழ்நிலையை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.மேலும் கூட்டமைப்பினரின் சந்திப்புக்களில் வெளிப்படை தன்மை இல்லையென்பது முற்றிலும் மறுக்கக்கூடிய விடயம் என்று கூட்டமைப்பின் உறுப்பினரொருவர் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில் பின்வருமாறு,