மூன்றாவது ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாடு
எதிர்கால இந்துசமுத்திர பிராந்தியத்தில் ஈழத்தமிழரும், இந்தியாவின் பாதுகாப்பும் என்ற தலைப்பிலான மூன்றாவது மாநாடு இந்தியாவின் மும்பை நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் (18/05/2023) நடைபெற்றது.
இனஅழிப்பிக்கு உட்படுத்தப்படுகின்ற ஈழத் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், இந்திய அரசினதும் இந்திய மக்களின் ஆதரவை வேண்டியும் இந்தியாவின் மும்பை நகரில் 3வது சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
ஈழத்தமிழர் விடுதலை
இந்த மாநாட்டினை லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சிறுதுளி (Small Drops) தன்னார்வ தொண்டு நிறுவனமும், மராட்டிய மாநிலத்தின் இந்து இளைஞர் படை (Hindu yuva Prerna) அமைப்பும் இணைந்து நடத்தினர்.
நீண்ட காலமாக ஈழத்தமிழர் விடுதலை பற்றியோ, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை சார்ந்த அரசியல் பற்றியோ பேச முடியாத சூழ்நிலை ஒன்று இந்தியவில் நிலவியது.
இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் 10 ஆம் திகதி முதலாவது மகாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதனையடுத்து இரண்டாவது மகாநாடு (28.01.2023) டெல்லியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த மண்டபமான அரசியல் சாசன கிளப்பில்(Constitution club of India) நடைபெற்றது.
இம்மகாநாட்டை சிறுதுளி தொண்டு நிறுவன நிறுவனரும், டெல்லி மகாநாட்டு அமைப்பாளருமான பாலநந்தினி(நிலா) அவர்கள் தலைமை தாங்க, தமிழர் நலனுக்கான சமூகநல அறக்கட்டளை அமைப்பின் தலைவர் பெரியசாமி ஒருங்கிணைக்க மகாநாடு சிறப்பாக நடந்தேறியது.
ஈழத் தமிழருக்கான ஆதரவு வேண்டிய மகாநாடு
இதனைத் தொடர்ந்து தற்போது மும்பையில் ஈழத் தமிழருக்கான ஆதரவு வேண்டிய மகாநாடு நடைபெற்றது.
ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினை சார்ந்து பல்வேறுபட்ட சாத்தியமான வழிகளை மிக நுணுக்கமாக கையாண்டு இன்றைய உலகளாவிய அரசியல் போக்கு மாற்றத்தினை கவனித்து அதற்கு ஏற்ற வகையில் புலம்பெயர் தமிழர்களையும் தாயகத் தமிழர்களையும் கலந்து கொள்ளும்படி மகாநாட்டு குழுவினரால் பகிரங்க அழைப்பும் விடப்பட்டது.
அதற்கமைய இந்நிகழ்வில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் பலரும் மற்றும் தாயகத்திலிருந்து ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மகாநாட்டுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைப்புச் செயலாளர் விவேக் தத்கர் வருகை தந்துள்ளார்.
பலர் பங்கேற்பு
தமிழினப் பற்றுள்ள மராட்டியத்தில் வாழும் தமிழர்களும் தமிழர் நலன் சார்ந்த நபர்களும் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
அத்தோடு இந்தியாவின் ஆளும் கட்சியான விஜேபி கட்சியின் மராட்டிய எம்.எல்.ஏ க்களான மராட்டிய எம்எல்ஏக்களான கணேஷ் நாயக் கேப்டன் தமிழ்ச்செல்வன், நவிமும்பை மாநகராட்சி முதல்வர் இந்திய அரசு சார்ந்த பிரமுகர்களும் இந்திய அரசியலை நிர்ணயம் செய்கின்ற பல்வேறுப்பட்ட அமுக்ககுழுக்களின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டு எதிர்கால இந்து சமுத்திரம் பாதுகாப்பு பற்றியும் பேசினர் என்பதும் இங்கே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும்.
நிகழ்வின் தலைமை உரையில் பாலநந்தினி அவர்கள் இந்துசமுத்திர பாதுகாப்பிற்கும், ஈழத்தமிழர் பாதுகாப்பிற்கும், இந்திய தேசிய பாதுகாப்பிற்கும், இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் ஜனநாயக வளர்ச்சிக்கும், விருத்திக்கும் தமிழீழம் அமைவதுதான் சரியான தீர்வாகவும், வழியாகவும், பாதுகாப்பாகவும் அமையும் என வலியுறுத்தி கூறினார்.
இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய மராட்டிய மாநிலத்தின் இந்து இளைஞர் படை அமைப்பின் பொதுச் செயலாளர் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான மத வழிபாட்டு தொடர்புகள், ராமாயண தொடர்புகள் பற்றியும் நிகழ்வில் உரையாற்றினார்.
இந்து சமுத்திர பிராந்தியத்தின் அதிகாரப்போட்டியும் சீனாவின் இந்து சமுத்திரப் பிரவேசம்
அவரைத் தொடர்ந்து இந்து இளைஞர் படை அமைப்பின் தலைவர் அரிகரன் அய்யர் இந்து சமுத்திர பிராந்தியத்தின் அதிகாரப்போட்டியும் சீனாவின் இந்து சமுத்திரப் பிரவேசம் பற்றியும் அது இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்து எவ்வாறு பாதிக்கும் என்பதை பற்றியும் ஹிந்தி மொழியில் விளக்கினார்.
இத்தகைய சூழமைவில் ஈழத் தமிழர்களும் இந்தியாவும் எவ்வாறு இந்து சமூகத்தை பாதுகாக்கலாம் என்பதை பற்றியும், இந்து சமுத்திரத்தை பாதுகாப்பதற்கு ஈழத் தமிழர்கள் இன்றியமையாத சக்தியாக உள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த சமுத்திரத்தில் இந்தியாவினதும் ஈழத் தமிழரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈழத் தமிழர்களும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்தியக் கடல் வளைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தமிழீழம் என்ற தனியரசு உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியாவிற்கான பாதுகாப்பு என்பது தமிழீழ உருவாக்கத்திலேயே தங்கியுள்ளது என்றும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார்.
இனப்படுகொலை
இம் மாநாட்டிற்காக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி இலங்கைத் தீவிலே 21ம் நூற்றாண்டில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை மீளவும் இலங்கையில் நடைபெறாதிருக்க இந்தியா வழிகோள வேண்டும்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகக் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்த முழுமையான அமுலாக்கம் என்பது காணி, பொலிஸ் நிதி அதிகாரங்கள் முழுமையாக உள்ளீர்க்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
அத்துடன் இலங்கையில் சுயநிர்ணய அப்படையிலான தமிழர்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற அதிகாரம் மிக்க கடல், பொலிஸ், நிதி வளங்களைக் கொண்ட பிராந்தியங்களின் கூட்டு உருவாக்கப்பட வேண்டும்.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்ட ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தாத நாடாக நாங்கள் இலங்கையைக் கருதுகின்றோம். இன்று மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் நிறைவுற்று கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மாகாணசபைத் தேர்தல்கள் இதுவரை நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் நிகழ்வின் ஏற்பாட்டார்கள் கருத்துத் தெரிவிக்கையில், சோழர்கள் கையாண்ட கடல்சார் வியூகங்கள் மூலம் இந்துமா சமுத்திரத்தை ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஆட்சி செய்தது போன்று மகராஸ்டிரா மாநில சத்ரபதி சிவாஜி அவர்களும் அரேபிய கடல் சார் வியூகங்களை அமைத்ததில் அன்றைய இந்தியாவின் கடல்சார் கொள்கை இந்திய மண்ணை பாதுகாத்தது.
பார்க்க நீரினை இந்தியாவிற்கும் ஈழத் தமிழர்களுக்குமானது. சீனா இதுவரை இந்தியாவின் அணுவாராய்ச்சி மையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. ஆனால் தற்போதைய புவிசார் அரசியல் நகர்வுகளின் மூலம் இன்று இந்தியாவிற்கு தெற்கே இலங்கத் தீவிலே அம்பாந்தோட்டை துறைமுகத்தை பெற்றதன் மூலம் இலங்கைத் தீவில் காலொன்று விட்டது சீன மன்னாரிலே கடலட்டை பண்ணை உட்பட வடக்கிலே இன்னும் பல தீவுகளிலும் காலை ஒன்றி விட்டதனால் இந்தியாவின் உச்சப் பாதுகாப்பு வளையம் வளையத்தை சீனா சில 100 கிலோமீட்டர் களுக்குள் ஆரம்பித்துவிட்டது
இது இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு பாரதூரமான அச்சுறுத்தலாகவும் அமைந்துவிட்டது. எனவே இந்து சமத்துவத்தை பாதுகாப்பில் ஈழத் தமிழரும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவ்வாறு செயல்படுவதற்கு ஈழத் தமிழர்கள் தமிழக தனியரசை உருவாக்குவதற்கு இந்தியா வழிவகை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
நிகழ்வில் இந்தியாவின் அரசியல் பிரமுகர்களும், இந்துத்துவவாத அமைப்புக்களின் பிரமுகர்களும், இந்திய நிர்வாக மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள். ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் என பல்வேறு பட்ட தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
