தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றமான நிலையானது, தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றத்தினை காண வழிவகுக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையானது அதிகரித்து வருகின்றது.
இதன் காரணமாக நடுத்தர காலத்தில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.902 டாலராக காணப்படுகின்றது.
தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக பணவீக்கமானது மீண்டும் உச்சம் தொடலாம். இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதம் அதிகரித்தாலும், அது பெரியளவிலான விலை ஏற்றத்தினை தடுத்துள்ளது.
இருப்பினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
