இலங்கையில் என்றும் நடந்திராத ஆட்சியாளருக்கு எதிரான போராட்டம்

Srilanka Protest President Political History Mirihana protest Sri Lanka Economic Crisis
By Steephen Mar 31, 2022 06:10 PM GMT
Report

இலங்கையில் ஆட்சி செய்த பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு எதிராக வரலாற்றில் என்றுமே நடந்திராத வகையில் நாட்டின் இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது வீட்டுக்கு எதிரில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மக்களின் இந்த அரசியல் எழுச்சி புதிய திருப்புமுனையாக கருதப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் மக்கள் ஜனாதிபதியோ அல்லது பிரதமரின் வீடுகளுக்கு எதிரில் இன்றைய தினத்தில் போல் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதில்லை.

அந்தளவுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் உட்பட அத்தியவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு மக்களை பாதித்துள்ளதை இது காட்டுகின்றது.

மிரிஹான எங்கிலிவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் இடத்தில் மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இது இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் இலங்கை தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இலங்கையில் தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளை சாதாரணமாக கருதி செயற்பட்டு வந்தமையே நிலைமை இந்தளவுக்கு மோசமடைய காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கொழும்பின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மக்கள் நடத்தும் இந்த போராட்டம் தொடர்ந்தும் நடைபெறுகிறது.

இனிவரும் காலங்களில் ஆட்சியாளர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சி வர முடியாது என்பதை இந்த ஆர்ப்பாட்டம் உணர்த்தி உள்ளதுடன் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர எண்ணி இருக்கும் நபர்களையும் ஆட்டம் காண செய்துள்ளதாக அரசியல் அவதானிகள் மேலும் கூறியுள்ளனர்.

இலங்கையை ஆட்சி செய்த ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களான பிரதமர்கள் இப்படியான மக்களின் எதிர்ப்பை தமது வீடுகளுக்கு அருகில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US