நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் தேர்தலை நடத்த தயாராகும் ஆணைக்குழு
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகின்றது.
இந்த நிலையில், பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் தேர்தல் தொடர்பான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி தேர்தல்கள் ஆணைக்குழுவை உத்தியோகபூர்வமாக தொடர்பு கொள்ளவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி ஜனாதிபதியால் ஒதுக்கப்படும்
எப்படியிருப்பினும் இது எப்போது நடக்கும் என்பதற்கான தயாரிப்புகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்கள் 7 முதல் 17 நாட்களுக்குள் முன்வைக்க வேண்டும்.
அதன் பின்னர் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் தேவையான பணம் ஜனாதிபதியால் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |