கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் கூற்று தவறானது - இந்திய வெளிவிவகார அமைச்சு
கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் குறித்த இலங்கையின் முன்மொழிவுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற இலங்கை அரசாங்கத்தின் கூற்று ‘உண்மையில் தவறானது’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை 35 ஆண்டுகளில் உருவாக்கி இயக்க அதானி குழுவுடன் ஒரு கூட்டு முயற்சியை கடந்த செவ்வாயன்று கொழும்பில் ஒப்புதல்அளித்தது.
அத்துடன் இந்த திட்டத்திற்கு முதலீட்டாளர்களை பரிந்துரைக்க அமைச்சரவை நியமித்த பேச்சு வார்த்தைக் குழு இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஜப்பானிய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் "அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட்"முன்வைத்த இந்த திட்டத்திற்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒப்புதல் அளித்துள்ளது" என்று இலங்கையின் அரசாங்க தகவல் துறை தமது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து நேற்று இந்தியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இலங்கை அரசாங்கம் இந்த திட்டத்தில் நேரடி முதலீட்டை மேற்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதாக வெளியான அறிக்கை உண்மையில் தவறானது என்று ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam