சீனா செய்த சேவையை மறக்க முடியாது! பிரதமர் மகிந்த பகிரங்க அறிவிப்பு

Srilanka China Mahindha
By DiasA Jun 15, 2021 11:41 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. எமது வரலாற்று ரீதியான நண்பரே  சீனா என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், நேற்று அலரி மாளிகையில் வைத்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதமர் ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு,

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக ஒரு அணிசேரா நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்தது. 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். அக்கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இவ்வருடம் ஆசியாவிலுள்ள நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும் என்பது எனது நம்பிக்கையாகும்.

சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும். அந்த வரலாற்று வெற்றியை சீனாவிற்கு பெற்றுக் கொடுத்தது.

இத்தால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1921ஆம் ஆண்டு பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆசியாவிற்கே மிகப்பெரியதும், முக்கியமானதுமான கட்சி என்று நான் கூறினேன்.

சீனா என்பது நாடு மட்டுமல்ல. சீனா என்பது மாபெரும் நாகரிகம். சீன நாடு பல் சீனா பல்வேறு நாடுகளால் படையெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட தவிர சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது படையெடுக்கவில்லை.

அத்துடன் உலகின் பெரும் தொகையான மக்கள் ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை நம்பியுள்ள நாடு இதுவாகும். அது மட்டுமல்லாமல், விவசாயத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நாடாக சீனா பார்க்கப்படுகிறது. அதனால் தான் சீனாவை ஒரு சிறந்த நாகரிகம் என்று நான் கூறினேன்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாகரிகத்தின் அடையாளத்தை இனங்கண்டு பணியாற்றியமையாலேயே இன்று சீனாவை உலகின் சக்தியாக வளர்ச்சி பெறச்செய்ய முடிந்துள்ளது. சீனாவிற்கும் எங்களுக்கும் இடையே வரலாற்று ஒற்றுமைகள் உள்ளன.

சீனாவின் பெரிய சுவரை சீனா கட்டும் போது, நமது மன்னர் தேவநம்பியதிஸ்ஸ மன்னன் அனுராதபுர மஹமேவனா உயனவினை நிறுவுகிறார். எங்கள் வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் நட்பு மிகவும் சக்திவாய்ந்தவை. ஒரு சக்திவாய்ந்த நாடாக சீனா நமது சுயாதீனத்தை பாதுகாக்க பெரிதும் உதவியது. இது பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய எங்களுக்கு உதவியது.

சீன அரிசி இரப்பர் ஒப்பந்தம் இலங்கையர்களுக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. எமது வரலாற்று ரீதியான நண்பர் என்றே நான் எப்போதும் சீனாவிற்கு கூறினேன்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியை எங்களுக்கு மிக நெருக்கமாக்கியது. கடந்த காலத்தில், பௌத்தமே சீனா மற்றும் இலங்கையை இணைத்தது. சுதந்திரத்திற்குப் பின்னர், எங்களிடையே உறவை முதலில் கட்டியெழுப்பியது கம்யூனிஸ்ட் கட்சிதான்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கை நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட பல விடயங்களை மதிக்கிறது. தேசிய பொருளாதாரம், சுயாதீன நாடு, விவசாயம் உள்ளிட்ட உள்ளூர் தொழில்துறை முறையை நம்பியுள்ள ஒரு சுதந்திர நாடு.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மறைந்த எஸ்.ஏ.விக்ரமசிங்க விவசாயத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் முன்வைத்த நில்வலா கங்கை திட்டம், இடதுசாரி தலைவர் ஒருவர் விவசாயம் குறித்து முன்வைத்த மிக முக்கியமான திட்டமாகும்.

இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக, சீனாவுடனான நமது கடந்தகால உறவை மேலும் வலுப்படுத்த முடிந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றிய திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் காலத்தில், சீனாவுடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எங்கள் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவே ஒரு அணிசேரா நாடாக உலகில் சுதந்திரமாக முன்னேற எங்களுக்கு உதவியது என்று நான் கூற வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிய அரசாங்கத்தின் கீழ் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாங்கள் முடிவுக்கு கொண்டுவந்தோம்.

யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் நமது சுதந்திரத்திற்காக சீன அரசாங்கம் செய்த தியாகங்களை நாங்கள் எப்போதும் பாராட்டுகிறோம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஆசிய நாடொன்றின் சுதந்திரத்திற்கு இது மாபெரும் பங்களிப்பாகும்.

இந்நேரத்தில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எங்களுக்கும் இடையிலான பிணைப்பை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது 78 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவர் டாக்டர் திரு. எஸ்.ஏ.விக்ரமசிங்க தெற்கிலிருந்து வந்தவர். டாக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்கவுடன் எனது பெரிய தந்தை டி.எம்.ராஜபக்ஷ மற்றும் எனது தந்தை டி.ஏ.ராஜபக்ஷ ஆகியோர் மிக நெருக்கமான அரசியல் உறவை கொண்டிருந்தவர்களாவர்.

அதேபோன்று நானும் எனது பெரிய தந்தை, தந்தை போன்றே திரு.எஸ்.ஏ.விக்ரமசிங்கவின் அரசியல் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட ஒருவர் என்பதை இந்நேரத்தில் நான் கூற வேண்டும்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் திரு. விக்ரமசிங்க என் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி என்றும் சொல்ல வேண்டும். பீட்டர் கேதமன், ராஜா கொள்ளுரே சரத் முத்தெட்டுவேகம, இன்று தலைமை வகிக்கும் வீரசிங்க அவர்கள் எமக்கு நெருக்கமான அரசியல் களத்தில் இருந்தவர்கள். உலகம் மாறியுள்ளது.

எமது நாடும் மாறியுள்ளது. தொழில்துறை புரட்சி மற்றும் தொழில்நுட்ப புரட்சிக்குப் பின்னர், இன்று இணைய யுகத்தில் இளம் தலைமுறையினர் உள்ளனர். இன்று நம்மிடம் இருப்பது அப்போது இருந்த அரசியல் கருத்துக்கள் அல்ல.

ஆனால் இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க, கடந்த கால முற்போக்கான அரசியல் சக்திகளின் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இடதுசாரி இயக்கங்கள் கடுமையாக போராடின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகம் எவ்வளவு மாறினாலும் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சமத்துவத்திற்காக முன்னின்றது. சமத்துவம் என்ற கருத்து இன்றும் உலகில் செல்லுபடியாகும். அதற்காக மிகப்பெரிய தியாகம் செய்த சீன கம்யூனிஸ்ட் கட்சி உலக சமத்துவத்திற்காக எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என நம்புகின்றேன் என பிரதமர் குறிப்பிட்டார்.


GalleryGalleryGallery
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US