நல்லூர் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு சவாலாக மாறியுள்ள அசைவ உணவகம்

Jaffna Nallur Kandaswamy Kovil Sri Lanka
By Dharu May 22, 2025 06:08 PM GMT
Report

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy temple) புனிதத் தன்மைக்கு தற்போது சவாலாக அந்த சூழலில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகம் மாறியுள்ளதாக யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஆலய சூழலில் புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவக விவகாரம் தொடர்பில் தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவிக்கையிலேயே வரதராஜன் பார்த்திபன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் யூலை மாதம் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆலய சம்பிரதாய முறைப்படி முதலாவது காளாஞ்சி யாழ்ப்பாணம் மாநகர சபையினருக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

வருடாவருடம் பாரம்பரிய முறைப்படி நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் யாழ்.மாநகரசபைக்கு வழங்கப்படுகின்ற இவ் உயரிய கௌரவத்தினைப் பெற்றுக்கொள்ளுகின்ற யாழ்.மாநகர சபை அதற்கு ஏற்றாற்போல் ஆலயத்தின் புனிதத் தன்மையினைப் பேணிப்பாதுகாத்து வந்தது.

யாழ்.நல்லூரில் அசைவ உணவகம் : கண்டனம் தெரிவிக்கும் சமாதானத்திற்கான இளைஞர் பேரவை

யாழ்.நல்லூரில் அசைவ உணவகம் : கண்டனம் தெரிவிக்கும் சமாதானத்திற்கான இளைஞர் பேரவை

கந்தப்பெருமானின் பெருந்திருவிழா

அந்த புனிதத் தன்மையினை முன்னாள் ஆணையாளர்களாக இருக்கட்டும் முன்னாள் முதல்வர்களாக இருக்கட்டும் அவர்கள் தொடந்தும் அந்த புனித்தன்மையினை பேணிவந்தார்கள் என்பது கடந்த காலங்கள்.

நல்லூர் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு சவாலாக மாறியுள்ள அசைவ உணவகம் | The Sacred Nature Of Nallur Temple

நல்லூர் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவிற்கான யாழ்.மாநகர சபைக்கு காலாஞ்சி வழங்கும் நிகழ்வுக்காக யாழ்.மாநகர சபை வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அப்பகுதி எங்கும் தண்ணீர் தெளிக்கப்பட்டு அப்பகுதியின் புனிதத்தன்மை பேணப்படும் இது நடைமுறை.

ஆனால் எதிர்வரும் செய்வாய்கிழமை காலாஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் இம் முறை மாநகர சபைக்கு முன்னால் ஒரு அசைவ உணவகத்தினை வைத்துக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை யாழ்.மாநகர சபை செய்யவுள்ளது மிக வேதனையான விடயம்.

முன்னால் மாமிசக் கடை யாழ்.மாநகர சபை வாசல் தொடக்கம் நிறைகுடம் வாழை தோரணம் மஞ்சள தண்ணி விசிறல் என்று காலாஞ்சி நிகழ்வுக்கான ஏற்பாடுகள்.

நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகம் : மாநகர சபையால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகம் : மாநகர சபையால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

நல்லூர் கந்தசுவாமி கோவில்

அந்த வகையில் நல்லூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினால் வழங்கப்படுகின்ற அவ் உயரிய கௌரவத்தினைப் பெற்றுக்கொள்ளும் தகுதியினை யாழ்.மாநகர சபை இம் முறை இழந்து விட்டது.

இன்னமும் நாட்கள் இருக்கின்றன இவ் விடயத்தில் யாழ்.மாநகர சபை உடனடியாக செயற்பாட்டு யாழ்.மாநகர சபையின் கௌரவத்தினை மீள் நிறுத்த வேண்டும்.

நல்லூர் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு சவாலாக மாறியுள்ள அசைவ உணவகம் | The Sacred Nature Of Nallur Temple

குறித்த வியாபார ஸ்தலத்தில்

1. உணவு கையாலுதலுக்கான அனுமதி இல்லை

2. உணவகத்தில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் இல்லை

3. முறையான அனுமதி பெறப்படாதா வியாபாரத்தலம்

4. அனுமதியில்லாத கட்டிடம்

5. வீட்டு மனைக்கான அனுமதியினை எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் வியாபார ஸ்தலமாக மாற்றியமை

6. வீதி எல்லைக் கோட்டுக்குள் மிகப் பெரிய நிரந்தர விளம்பரப்பலகை இவ்வாறு பல விதி மீறல்கள் காணப்படுகின்றன.

இவ்விடயத்தில் மாநகர சபை தன்னுடைய அசமந்த போக்கினைத் தொடர்ந்து கடைப்பிடிக்காமல் பாரம்பரிய முறைப்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை நல்லூர் கந்தப் பெருமானினால் வழங்கப்படுகின்ற உயரிய கௌரவத்தினைப் பெற்றுக்கொள்ளுவதற்கு ஏற்றவகையில் தங்களை தகுதியுடையவர்காக நிரூபணம் செய்ய வேண்டும்.

உலகின் தலை சிறந்த சொல் செயல்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகம்! வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கோரிக்கை

நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகம்! வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கோரிக்கை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US