அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் ஆகப் பெரிய செல்வந்தராக இடம்பிடித்த இந்தியர்
ஆசியாவின் ஆகப் பெரிய செல்வந்தராக இருந்த முக்கேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் கௌத்தம் அதானி 10ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
அதானியின் சொத்து மதிப்பு 91.3 பில்லியன் டாலர் (சுமார் 122.8 பில்லியன் வெள்ளி என கணக்கிடப்பட்டுள்ளது.
Reliance Industries குழுமத்தின் தலைவரான அம்பானியின் சொத்து மதிப்பு 89.4 பில்லியன் டாலர் ஆகும். அதானியின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதே வேளையில், அம்பானியின் சொத்து மதிப்பு 6.5 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதானிக்கு சொந்தமான Adani குழுமம், மின்சார உற்பத்தி, சமையல் எண்ணெய் உற்பத்தி, சொத்துச் சந்தை, நிலக்கரி என்று பல்வேறு வர்த்தகங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.