முக்கிய பிரமுகரை பார்த்து கூச்சலிட்ட பொதுமக்கள்! - பொலிஸார் அதிரடி நடவடிக்கை
நுகேகொட - ஜூப்லிகனுவ பகுதியில் பால்மா விற்பனை நிலையம் ஒன்று மூடப்பட்டதாக வெளியான செய்தியை மிரிஹான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மறுத்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள பால்மா விற்பனை நிலையம் ஒன்றில் பால்மா வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், அந்த வழியாகச் சென்ற முக்கிய பிரமுகரின் வாகன பேரணியை கண்டு கூச்சலிட்டுள்ளனர்.
அதேநேரம் நேற்று மாலை குறித்த முக்கிய பிரமுகர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, வரிசையில் நின்ற பொதுமக்கள் கோபத்துடன் வாகன பேரணியை நோக்கி கூச்சலிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மிரிஹான பொலிஸார் பால்மா விற்பனை நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
எனினும், இது குறித்து மிரிஹான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு கேட்ட போது அவர் அதனை மறுத்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1345 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




