அடுத்த வாரமளவில் அரிசியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
அடுத்த வாரம் முதல் அரிசியின் விலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நெல் அறுவடை இடம்பெறுவதனால் இவ்வாறு அரிசியின் விலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் பி.கே.ரஞ்சித் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் அரிசியின் விலையில் அதிகரிப்பு காணப்பட்டது. நெல் தட்டுப்பாடு மற்றும் நெல்லின் விலை அதிகரித்தமை என்பன காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டது.
எவ்வாறாயினும் வவுனியா மற்றும் வடமேல் மாகாணங்களில் நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. எனவே, எதிர்வரும் வாரத்தில் அரிசியின் விலை குறைவடையும் என அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri