120 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள பாலின் விலை?
அகில இலங்கை பால் விவசாயிகள் சம்மேளனம் ஒரு லிட்டர் பாலுக்கு குறைந்தபட்சம் 120 ரூபா விலை உயர்வைக் கோரியுள்ளது.
பால் பண்ணையாளர்களை பாதுகாக்கும் தேசிய மைய தலைவர் சுசந்த குமார நவரத்ன (Susantha Kumara Navaratne) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பால் மா நிறுவனங்களின் உற்பத்திகளுக்கு விலை அதிகரிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு கிடைக்கும் லாபம் பால் விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
பால் மா நிறுவனங்கள் மாத்திரமே அந்த லாபத்தை பெறுகின்றன. பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து அந்த நிறுவனங்களுக்கு விளக்கமளிக்கப்படுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. கால்நடை மருந்து மற்றும் வேலை சிகிச்சை, தீவனம் மற்றும் தாதுக்களின் விலையும் உயர்ந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சிரமத்தை நாடு முழுவதும் உள்ள 400,000 பால் விவசாயிகள் எதிர்கொள்வதாக நவரத்ன கூறியுள்ளார்.
எனவே, பால் விலையை குறைந்தபட்சம் 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என நவரத்ன கோரியுள்ளார்.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri