சிகரட்டின் விலை உயர்த்தப்பட உள்ளது?
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிகரட் விலை தொடர்பில் விலைச்சூத்திரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு விலைச் சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்டால் சிகரட்டின் விலை 4 அல்லது 5 ரூபாவினால் உயர்த்தப்படும் என புகையிலை மற்றும் அல்ஹகோல் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிகரட் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் விலைச் சூத்திரம் உருவாக்கப்படுவதாகத் அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விலைச் சூத்திரம் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் சிகரட்டின் விலை 4 முதல் 5 ரூபாவினால் உயர்த்தப்படும் எனவும் ஐந்து ஆண்டுகளில் 20 ரூபாவினால் உயர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்பிடிப்பதன் காரணமாக நாள் ஒன்றுக்கு இலங்கையில் 60 பேர் உயிரிழப்பதாகவும் ஆண்டொன்றில் 22,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.





அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
