இலங்கை மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி - நாளை முதல் அதிகரிக்கப்படும் விலை
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை நாளை முதல் மீண்டும் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புதிய விலைகளை நாளை அறிவிக்க முடியும் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அஷோக பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மா நிறுவனங்கள் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தன.
400 கிராம் பால் மா பாக்கெட் 90 ரூபாயிலும், ஒரு கிலோகிராம் பால் மா பாக்கெட் 225 ரூபாயிலும் அதிகரிக்கவுள்ளது.
அதற்கமைய சந்தையில் தற்போது 400 கிராம் பால் மா பக்கட் ஒன்று 470 ரூபாயிற்கும், ஒரு கிலோ கிராம் பக்கட் 1,170 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.