எகிப்துக்கு விஜயமாகும் ஜனாதிபதி!
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று எகிப்துக்குச் செல்லவுள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்க அடுத்த வாரம் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் (COP27)27ஆவது மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
முக்கிய COP27மாநாடு ஷர்ம் அல்-ஷேக் சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று முதல் நவம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
COP27 மாநாடு

இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள 200க்கும் மேற்பட்ட அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
எகிப்தில் நடைபெறும் ஐ.நா.காலநிலை உச்சி மாநாட்டில், பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கை குறித்து உலகத் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்ற செயலகம் மற்றும் இலங்கையிலும் உலக நாடுகளிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்பிலான விபரங்களை முன்வைக்கவுள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கான செயலகம்

நாடு எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு, காலநிலை மாற்றத்தினால் இலங்கையும் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றது.
இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களை முகாமைத்துவப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் காலநிலை மாற்றத்துக்கான செயலகத்தை நிறுவ முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 14 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan