மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்தார்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலே (Ibrahim Mohamed Solih) ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்சவை(Gotabhaya Rajapaksha) சந்தித்துள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இரு நாடுகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும்(Mahinda Rajapaksha) மாலைதீவு ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த, மாலைதீவு ஜனாதிபதிக்கு விசேட பகல்போசன விருந்து ஒன்றை வழங்கியுள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து பிரதமருக்கும், மாலைதீவு ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி..
இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam