ஜனாதிபதி கோட்டாபய வீட்டில் இருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு ஜனாதிபதி ஒரு நாள் கூட செல்லவில்லை எனவும், அவை நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
7 அல்லது 8 ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லங்கள் நாடு முழுவதும் உள்ளன. ஜனாதிபதி மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருப்பது நல்லதென்றாலும், ஜனாதிபதியின் இல்லத்திற்கு அவர் செல்வதே தனக்கு விருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிரிஹான வீட்டில் ஜனாதிபதி தங்கியிருப்பது அயலவர்களுக்கு தொந்தரவாக உள்ளதென அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வீட்டில் இருப்பது மற்றும் குறித்த பகுதியில் பொலிஸார் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வதால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும், இதனால் சிறுதொழில் நிறுவனங்கள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
