பிரதான சூத்திரதாரியை சுட்டுக்கொலை செய்த பொலிஸார்
அண்மையில் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சூத்திரிதாரி சுட்டுக்கொலை
உயிரிழந்த சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவவின் பிரதான உதவியளார் எனவும், அவர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.
சந்தேகநபரை கைது செய்யச் சென்றபோது, அவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதுடன், மோட்டார் சைக்கிளை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிதாரியின் தாக்குல்
பின்னர், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் பதிலுக்கு பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 40 வயதுடைய இஹல வித்தானகே ஜோஸப் என்பவர் என தெரியவந்துள்ளது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
