யூரோ கால்பந்து தொடர்! - மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்
கால்பந்து ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்த மிக முக்கியமான தொடர்களில் ஒன்றான யூரோ கிண்ண கால்பந்தாட்ட தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த தொடரில் இங்கிலாந்து அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட இத்தாலி அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.
இங்கிலாந்தின் வெம்லி மைதானத்தில் ஏராளமான பார்வையாளர்கள் மத்தியில் இடம்பெற்ற இந்த போட்டியில் இத்தாலி கால்பந்து அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
பெனால்டி ஷூட் அவுட் அடிப்படையில் இத்தாலி அணி 3-2 என யூரோ கிண்ணம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து அணி 55 ஆண்டுகளுக்குப் பின்னர் கால்பந்து உலகின் மிகப்பெரிய தொடர்களில் ஒன்றின் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இருந்தாலும், சொந்த நாட்டு ரசிகர்களுக்கு மத்தியில் தோல்வியை தழுவிக்கொண்டது.
இந்த போட்டியின் போது நபர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தனது மேலாடை இல்லாது மைதானத்திற்குள் நுழைந்த நபர் அங்கும் இங்குமாய் ஓடித்திரிந்தார்.
இறுதியில் அவர் பாதுகாவலர்களால் பிடிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்பட்டிருந்தார். குறித்த நபரின் செயலால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri