நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்! - ரணில் விசேட அறிக்கை (Video)
நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இதனை கூறியுள்ளார். “நாட்டில் டொலர் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது.
குறிப்பாக தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன, வேலைகள் இழக்கப்படுகின்றன, நடுத்தர வர்க்கத்தினர் வீழ்ச்சியடைந்து வருகின்றனர், விவசாயிகள் சிக்கித் தவிக்கின்றனர், இவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், பல நாடுகள் 2020-2021 ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று உதவி பெறுவது அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று வழியை முன்வைப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவையொன்றும் இதுவரை நடைபெறவில்லை எனவும் தற்போது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இப்போது நாம் இன்னொரு பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இந்த நாட்டில் ஏற்படப்போவது உணவுப் பற்றாக்குறைதான். எல்லாத் தகவல்களின்படியும் சிங்களப் புத்தாண்டின் போது நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடும்.
அவ்வாறு நடந்நதால் நாட்டு மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்படும், அது அரசாங்கத்தையும் நமது நாடாளுமன்றத்தையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
