“அரசாங்கத்திற்கு பயந்து சிற்றுண்டிசாலையில் ஒளிந்துகொண்ட எதிர்க்கட்சி”
நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக அரசாங்கத்திற்கு பயந்து எதிர்க்கட்சியினர் ஓடிச்சென்று ஒளிந்துகொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமல வீரதிசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“இன்று நாடாளுமன்றம் பாழடைந்துள்ளது. அரசாங்க கட்சியை எதிர்கொள்ள முடியாமல் சிரட்டைகளை போல் ஒளிந்துகொண்டுள்ளார்கள்.
இலங்கை நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக அரசாங்கத்திற்கு பயந்து ஓடிச்சென்று ஒளிந்துகொண்டுள்ளனர். நான் பார்த்தேன் அனுர குமார திசாநாயக்க உள்ளார். காலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகைத்தந்தார். அவருக்கு நாம் நன்றிகளை கூறிக்கொள்ளவேண்டும்.
அரசாங்கத்திற்கு பயந்து நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு இவர்களுக்கு அச்சம், ஆனால் சிற்றுண்டிசாலையில் உண்பதற்கு இவர்களுக்கு அச்சமில்லை. நான் இதை ஒளிந்துகொண்டிருபவர்களுக்காகவே சொல்கின்றேன்.
இந்த கடுமையான சூழ்நிலையில் மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றத்திற்கு வந்து மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் எதிரணியில் அனைவரும் ஒளிந்துகொண்டுள்ளார்கள். ஆனால் எனக்கு இருக்கும் பிரச்சினை இவர்கள் ஏன் சிற்றுண்டிசாலைக்கு வருகின்றார்கள்.
சாப்பாட்டிற்காக இவர்கள் வருகின்றார்கள். தமக்கு வாக்குகளை வழங்கிய மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாமல் செயற்படுகின்றனர் என்றார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
