வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணை தாக்கிய அதிகாரிகள்!
ஹலவத்த - பங்கதெனிய கூட்டுறவுச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் அப்பகுதியில் அனுமதியின்றி வியாபாரம் செய்வதாகக் கூறப்படும் பெண்ணொருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், மேற்படி அதிகாரிகள் குறித்த பெண்ணை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெண் பங்கதெனிய மன்சந்தியில் உள்ள தனியார் கட்டடமொன்றுக்கு பின்புறம் சிறுதொழில் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்
இந்நிலையில் ஹலவத்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் அண்மையில் குறித்த கட்டடம் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், அந்த பெண் அவ்விடத்தை விட்டு வெளியேறாததால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதென கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஹலவத்தை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சரத் விஜேசிங்க, இது குறித்து தெரிவிக்கும் போது, குறித்த பெண் தனது கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான காணியை பலவந்தமாக ஆக்கிரமிக்கத் முயற்சிப்பதாகவும், தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.