மித்தெனிய படுகொலை விவகாரம்! இருவருக்கு திறந்த பிடியாணை உத்தரவு
துபாயில் தற்போது தலைமறைவாக உள்ள "தம்பிலி லஹிரு" மற்றும் "பாக்கோ சமன்" ஆகியோருக்கு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் பிடியானை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மித்தெனிய படுகொலை தொடர்பில் இன்று (18) இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது மகன், மகளைக் கொன்ற குற்றத்திற்கு மேற்படி இருவரும் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
11 சந்தேக நபர்கள் கைது
குறித்த கொலை தொடர்பாக மித்தெனிய பொலிஸ் நிலையத் தலைமை ஆய்வாளர் ரோஹன் விக்ரமசேகர நீதவான் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 18 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மகன் மற்றும் மகளைக் கொல்ல தம்பிலி லஹிரு மற்றும் பாக்கோ சமன் ஆகியோர் முக்கிய திட்டத்தைத் தயாரித்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், மித்தெனிய பகுதியில் வசிக்கும் லஹிரு மதுஷன் என்ற "தபிலி லஹிரு" மற்றும் மித்தெனிய உலஹிட்டியவில் வசிக்கும் நிர்மலா சஞ்சீவா என்ற "பகோ சமன்" என்ற இருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் தெற்கில் செயல்படும் போதைப்பொருள் வர்த்தகத்தில் இரண்டு வலுவான நபர்கள் என்றும், அவர்கள் மீது பல குற்றச் செயல்கள் இருப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளனர்.
இந்தக் கொலையில் முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 11 சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |