தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: வீ.ஆனந்த சங்கரி (video)

Ranil Wickremesinghe Sri Lanka Politician President of Sri lanka
By Kajinthan Dec 04, 2022 01:31 PM GMT
Report

”தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது எனவும் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரின் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் நேற்று (03.12.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியமை சட்டவிரோதமானதாகவே பார்க்கிறேன்.


அரசியல் தீர்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு செல்லவுள்ளதாக அறிகின்றேன்.

கடந்த 2004ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க சமஷ்டிக் கோரிக்கையுடன் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய போது தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.

அந்தத் தேர்தலில் வெறும் தசம் மூன்று வாக்குகளில் ரணில் விக்ரமசிங்க தோற்றுப் போக ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச தெரிவானார்.

தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: வீ.ஆனந்த சங்கரி (video) | The Mandate People Cannot Be Obtained Elections

இப்போது மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சார்ந்து பேச்சு வார்த்தைக்கு செல்ல போவது அரசியல் இராஜதந்திரமாக என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

சமஷ்டி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தை மட்டும் இராஜ தந்திரம் என நினைப்பது தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் ஒரு நாடகமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவது பிழையல்ல ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி சமஷ்டியைப் பெற முடியாது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிராத ரணில் விக்ரமசிங்க வழங்கப் போகும் தீர்வினை நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கவே மாட்டார்கள்.

ஏனெனில் நாடாளுமன்றத்தில் உள்ள அநேகமானவர்கள் தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு கிடைக்கக் கூடாதென்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க வரும் பேச்சு வார்த்தை என்ற போர்வையில் சர்வதேசத்தை ஏமாற்ற தமிழ் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறார்கள்.

இறுதி யுத்தம் 

கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடப்பெற்றுக் கொண்டிருந்தபோது பலமான ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச இருந்தார்.

அக்காலப் பகுதியில் யுத்தத்தை நிறுத்துவோம் என்னுடன் சேர்ந்து வாருங்கள் ஜனாதிபதியுடன் பேசுவோம் என கேட்டபோது தமிழ் தலைமைகள் அதற்கு விரும்பவில்லை என்னைத் துரோகி என்னப் பட்டம் சூட்டினர்.

தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: வீ.ஆனந்த சங்கரி (video) | The Mandate People Cannot Be Obtained Elections

தமிழ் தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் பேசும்போது யாருடன் பேசப்போகிறோம் எதைப் பேசப் போகிறோம் ரணில் விக்ரமசிங்கவினால் தர முடியுமா அல்லது அதனைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதே இராஜதந்திரம்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இந்தியாவின் கைகளிலே தங்கி உள்ளது தமிழ் தலைமைகள் எந்த ஜனாதிபதியுடன் பேசியும் இறுதியில் இந்தியாவே தீர்மானிக்கும்.

ஆகவே அதனை விடுத்து ஜனாதிபதி அழைத்தார் நாம் வருகிறோம் என எடுத்த எடுப்பில் பேச்சுவார்த்தைக்கு ஓடுவது தமிழ் மக்களுக்கு தீர்வாகாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US