சீனாவில் திடீரென இழுத்து மூடப்பட்ட மிகப்பெரிய துறைமுகம்!
சீனாவில் மிகப்பெரிய துறைமுகமாக கருதப்படும் நிங்போ சுவாசான் துறைமுகம் திடீரென மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
சீனாவில் கோவிட் வழக்குகள் பெரிய அளவில் ஏற்படாத நிலையில் திடீரென எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கேள்விகளை எழுப்பியுள்ளது.
2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவில் கோவிட் பரவ தொடங்கியது. அதிகாரபூர்வமாக 2019 டிசம்பர் மாதத்தில் தான் கோவிட் பரவியது சில மாதங்களிலேயே சீனா பரவலை கட்டுப்படுத்திவிட்டது.
சீனாவில் தற்போதைய நிலவரப்படி மொத்தமாக 94,161 வழக்குகள் மட்டும் கடந்த இரண்டு வருடத்தில் பதிவாகியுள்ளது.
அதிலும் 1,836 வழக்குகள் மட்டுமே தற்போதைய நிலவரப்படி சீனாவில் உள்ளது. இந்த நிலையில்,தற்போது சீனாவில் கோவிட் பாதிப்பு காரணமாக உலகின் மூன்றாவது பெரிய துறைமுகமான நிங்போ சுவாசான் துறைமுகம் மூடப்பட்டுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகவும், உலகின் மூன்றாவது பெரிய துறைமுகமாகவும் இது பார்க்கப்படுகின்றது. முழுக்க முழுக்க வர்த்தக பணிகளை இந்த துறைமுகத்தில் மேற்கொண்டு வருகிறார்கள்.
2020ம் ஆண்டு கோவிட் காலத்தில் கூட இங்கு 1.2 டன் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் இவ்வளவு பெரிய துறைமுகத்தை கோவிட் பரவலால் சீனா சீல் வைத்துள்ளமை சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
துறைமுகத்தில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக மொத்தமாக துறைமுகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் கோடி அந்த நாட்டிற்கு இழப்பு ஏற்படும். ஆனாலும் கோவிட் பரவல் காரணமாக துறைமுகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.அங்கு 2000க்கும் அதிகமான ஊழியர்களுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், துறைமுகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோவிட் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள்,ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படாத நிலையில், நிங்போ சுவாசான் துறைமுகத்தில் ஏற்பட்ட பாதிப்பையடுத்து சீனா ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் இடம் என்பதால் சீனா இதை அணுகுகிறதா அல்லது இதற்கு வேறு காரணம் ஏதேனும் இருக்கின்றதா என்று பல்வேறு தரப்புகளிலிருந்தும் கேள்வி எழுந்துள்ளது.







புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 33 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
