ஏழை நாடுகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜோ பைடன்
உலகம் முழுவதும் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,அமெரிக்கா அரை பில்லியன் புதிய ஃபைசர் தடுப்பூசிகளை வாங்கி, உலகின் குறைந்த நடுத்தரமான வருமானத்தைக் கொண்ட நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது,
பல ஏழை நாடுகள் தடுப்பூசி வாங்க முடியாமல் திணறி வருகின்றன. அமெரிக்கா ஏற்கனவே 8 கோடி தடுப்பூசிகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில், 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த வரலாற்று நடவடிக்கை கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.