மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும் யோசனை
அரச நிறுவனங்கள் மின் சக்தியில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்டங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை செயற்பாட்டு ரீதியாக பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
போக்குவரத்து துறையினர் மின்சாரத்தை பயன்படுத்துவது அதில் உள்ள சவால்கள் என்ன என்பதை அடையாளம் காண நியமிக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மின்னியல் வாகன பயன்பாடு தொடர்பில் ஒரு துறையை மாத்திரமே ஊக்குவிக்காது, அது முழு நாட்டுக்குமான பொது வேலைத்திட்டமாக மாற வேண்டும்.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, போக்குவரத்து துறையின் உண்மையான தேவைகள் என்ன என்பதை அறிந்துகொள்வது முக்கியமானது.
அரசாங்க நிறுவனங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு இந்த மின்சார வாகனங்கள் உகந்ததா, தேவையான தூரம் இந்த வாகனங்களில் பயணிக்க முடியுமா, நீண்ட தூரம் செல்லக் கூடிய வகையில் உலகில் மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பன குறித்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமாயின் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் விலைகள் டீசல் வாகனங்களை விட குறைவாக இருக்க வேண்டும் எனவும் ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...
சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri