சாராவை மறந்த அரசாங்கம்! நினைவூட்டும் முஜிபுர் ரஹ்மான்
பயங்கரவாதி சஹ்ரானுக்கு ஆணை பிறப்பித்தவர்கள் குறித்து அறிய அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபராக கருதப்படும் சாரா உயிருடன் உள்ளார் என்பதை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் சாராவை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சாரா என்ற ஒருவர் இருந்தார் என்பதை அரசாங்கம் மறந்து விட்டது. பயங்கரவாதி சஹ்ரானுக்கு ஆணை பிறப்பித்தவர்கள் குறித்து அறிய அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.