ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் திட்டமில்லை – அரசாங்கம்
ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் திட்டமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
1970ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஊடகப்பேரவை சட்டமானது தற்காலத்திற்கு பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக வலையமைப்புக்கள் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஊடகப் பேரவை சட்டம் உருவாக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் ஊடகங்களை கட்டுபடுத்துவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களை கட்டுப்படுத்தும் எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திற்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்கள் பிரதான தலைப்புச் செய்தியில் பிரதான தலைப்புச் செய்திகளை வெளியிட்டு விட்டு பின்னர் கடைசி பக்கத்தில் வருத்தம் தெரிவிக்கும் நடைமுறை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் செய்தி அறிக்கையிடல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
