நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை! கெஹெலிய
இலங்கையில் கோவிட் வைரஸ் நிலைமை மோசமாகிவிட்டால், நாடு முழுவதும் முடக்கப்படுவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை.
அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் முடக்கப்படுவதற்கான அவசியம் குறித்து விவாதம் நேற்று கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்றது.
இந்தநிலையில் வைரஸ் பரவுவதைக் குறைக்க தற்போது வலய மற்றும் பகுதி வாரியாக முடக்குதல் போதுமானது என்பது அரசாங்கத்தின் கருத்தாக உள்ளது என்று ரம்புக்வெல்ல கூறினார்.
அந்த நேரத்தில் நாட்டின் நிலைமையைப் பொறுத்து எதிர்காலத்தில் இந்த முடிவு மாறக்கூடும் என்று அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அண்மையில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அண்டை நாடான இந்தியாவைப் போல இலங்கையும் மாறாது என்று அவர் குறிப்பிட்டார்.
"இலங்கை மக்கள் விவேகமானவர்கள், மேலும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அவர்கள் பொறுப்பான மற்றும் விவேகமான முறையில் செயல்படுவார்கள் என்று நம்புவதாக அமைச்சர் கூறினார்.
தனிமைப்படுத்தல் மற்றும் முடக்குதல் தொடர்பான முடிவுகள் சுகாதார அதிகாரிகளுடன்
இணைந்து கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தால் எடுக்கப்பட்டதாக
அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 9 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
