அரசாங்கம் நிபுணர்களின் கருத்துக்கு செவிசாய்ப்பதில்லை! பேராசிரியர் சுனேத் அகம்பொடி
அரசாங்கம் நிபுணர்களின் கருத்துக்கு செவி சாய்ப்பதில்லை என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வெளியிடப்பட்ட கோவிட் மரண விபரங்களின் அடிப்படையில் நேற்றைய தினம் 156 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், இன்றைய தினம் 150க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது உண்மையான புள்ளி விபரங்களா என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நிபுணர்களின் நிபுணத்துவ ஆலோசனைகள் அனைத்தையும் அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று பரவுகை தொடர்பிலான உதாசீனமான போக்கு தொடர்ந்தும் பின்பற்றப்பட்டு வருவதாக பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
கோவிட் மரணங்கள் தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து டுவிட்டரில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
The “reported” number of deaths is (not sure what the actual number) exceeding 150 today. Despite the exponential increase of the deats, the government turns a deaf ear to all expert opinions. https://t.co/Hjeci75WPk
— Prof Suneth Agampodi (@sunethagampodi) August 12, 2021