தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையகத் தமிழர்களின் பொற்காலம்
மலையகத் தமிழர்களின் பொற்காலமாக தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி இருக்கும் என பொருள்கொள்ளும் வகையில் அதன் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் இந்தியா வம்சாவழித் தமிழர்கள், பெருந்தோட்டத் தமிழர்கள் என்ற அழைக்கப்பட்ட அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையகத் தமிழர் என்று அழகாக, தெளிவாக அடையாளமிடப்பட்டு, இந்த நாட்டின் தேசிய இனமாக அங்கீகரித்து நாட்டின் சமத்துவப் பிரஜைகளாக அழைக்கப்படுவார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் கூறியுள்ளார்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
“இந்தத் தேர்தல் தொடர்பில் மலையக மக்கள் பற்றி தேசிய மக்கள் சக்தியில் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் எனப் பலரும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மலையக மக்கள்
மலையக மக்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் கொள்கைத் திட்டத்தில் காணி உரிமை, வீட்டு உரிமை, அவர்களுடை சம்பளப் பிரச்சினை போன்ற விடயங்களுக்கு ஒரு தெளிவான உபாயத்தை வைத்திருக்கின்றோம்.
அதே வழியில் இந்த மலையக மக்களை ஒரு தேசிய இனங்களாக இணைத்து வழி நடத்த இருக்கின்றோம்.
மலையக மக்கள் இது வரை காலமும் இந்தியா வம்சாவழித் தமிழர்கள், பெருந்தோட்டத் தமிழர்கள் என அழைக்கப்பட்டார்கள்.
தேசிய மக்கள் சக்தியினுடைய ஆட்சியில் மலையகத் தமிழர் என்று அழகாக தெளிவாக அழைக்கப்படுவார்கள்.
அந்த அடையாளம் அவர்களை இந்த நாட்டிலே சமுத்துவப் பிரஜைகளாக கொண்டு வரும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என்பதை இங்கே நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
தேர்தல் விஞ்ஞானத்தில் ஐந்து விடயங்கள்
அதாவது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையகம் குறித்து ஐந்து விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அவையான,
01) தோட்டங்களைச் சார்ந்த தமிழ் மக்களை “மலையகத் தமிழர்” என்று ஏற்றுக் கொள்ளல்.
02) லயன் அறைகளில் வசிக்கின்ற ஒவ்வொரு மலையக தமிழ் குடும்பத்திற்கும் நிரந்தர வீடொன்றினை அமைத்துக் கொள்வதற்காக காணியை வழங்குதல்.
03) மலையக மக்களுக்காக கௌரவமான ஆதாயமொன்று.
04) சம்பள அதிகரிப்பு, மற்றும் இளைஞர்களுக்கு பயிர் செய்வதற்காக காணிகள் வழங்கல்.
05) மலையக தமிழ் பெண்களுக்கு கண்காளிப்பாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் பதவிகளுக்கு சமமான வாய்ப்பினை வழங்குதல் என்பன உள்ளடக்குகின்றன.
தோட்டங்களைச் சார்ந்த பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்கள், குடிநீர் மற்றும் துப்புரவேற்பாட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |