லண்டனிலிருந்து சென்ற விமானத்தில் நடுவானில் குழந்தை பிரசவித்த பெண்!
லண்டனிலிருந்து இந்தியா நோக்கி பறந்த விமானமொன்றில் நடுவானில் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர் இந்தியா விமானமொன்று கருங்கடலை கடந்து வந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த, கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த, விமானத்தில் பயணித்த மருத்துவக்குழுவினர் விமான ஊழியர்களின் உதவியுடன், உடனடியாக கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சையளித்து பிரசவம் பார்த்துள்ளனர்.
குறித்த தாய் ஆண் குழந்தையொன்றினை பெற்றெடுத்ததும் தாய்க்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் தாயையும், குழந்தையையும் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன்,அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளதாகவும்,விரைவில் அவர்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் ஏர் இந்தியா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam