ஜனாதிபதியே அதனை செய்தார், நிதி அமைச்சருக்கு தெரியாது: - அமைச்சர் வெளியிட்ட தகவல்
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) சமர்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவே (Gotabaya Rajapaksa) இது குறித்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவைக்கு விளக்கியதன் பின்னர், அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றே கைச்சாத்திடப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கும், நிதி அமைச்சருக்கும் தொடர்பில்லை எனவும், அவ்வாறான தொடர்பு இருப்பதாக சிலர் கூறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
