புலம்பெயர் மக்களின் மன்றாட்டம்! அதிரடி காட்டும் சாணக்கியன் - சுமந்திரன்..
இலங்கை பேரனர்த்தத்தில் சிக்கி தவிக்கும் நிலையில் பல அரசியல்வாதிகள் இந்த நிலையில் அரசியல் பேசுவதை பார்க்க முடிகின்றது.
கம்பளை பகுதியில் மண்சரிவினால் காணாமல் போயுள்ளவர்களை தேடுவதிலும், உதவிகளை வழங்குவதிலும் அரச தரப்பு முறையாக செயற்படவில்லை கடும் மழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்துக்கு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்றையதினம் (2) விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அரசு படுகொலை செய்துள்ளது என்று விமர்ச்சித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, இலங்கையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாது" என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அனர்த்திற்கு அப்பால் இந்த விடயங்களும் தற்போது ஊடகப்பரப்பில் பேசப்படுகின்றது.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...