உடவளவை விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது : வட்டக்கச்சி கமக்காரர் அமைப்பு
அரசாங்கம் மின்சாரத்திற்கு பயன்படுத்துவதற்காக 25 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர் செய்த நெல்லுக்கு தண்ணீரை வழங்காது இருக்கின்றது. அரசாங்கம் விலசாயத்துக்கு தண்ணீரை வழங்க வேண்டும் என வட்டக்கச்சி கமக்காரர் அமைப்பின் செயலாளர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று ( 05.08.2023 ) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
30000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடவளவை விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது எனவே அரசாங்கம் தண்ணீரை வழங்க வேண்டும் .
ரணில் அரசாங்கம் மின்சாரத்திற்காக 25 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர் செய்த நெல்லுக்கு தண்ணீரை வழங்காது இருக்கின்றது.
இதனால் 30000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரணில் அரசாங்கம் பாரிய பொருளாதார குற்றத்தை செய்து வருகிறது.
விவசாயிகளின் உரிமைகளை சீண்டிய முன்னாள் ஜனாதிபதி கூட வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என
தெரிவித்துள்ளார்.